

மாவட்டம்தோறும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களை அமைக்க மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி தினம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியுள்ளது: ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களை பரந்த அளவில் அமைக்காமல், ஒருங்கிணைந்த அளவில் அமைக்க வேண்டும்.
இப்பயிற்சி பெறுபவர்கள்தான் வங்கிகளில் கடன்பெற முடியும் என்பது கட்டாயமாக இருக்கக் கூடாது. ஏனெனில் இதனால் பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. என்னிடம் மட்டும் உரிய அதிகாரம் இருந்தால், சில ஊரக சுயவேலைவாய்ப்பு மையங்களை நானே மூடிவிடுவேன் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.