Published : 30 Oct 2014 09:02 AM
Last Updated : 30 Oct 2014 09:02 AM
வரும் நவம்பர் 1-ம் தேதி குஜராத் கடற்கரையை நிலோபர் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, குஜராத் கடலோரப் பகுதியிலுள்ள 30 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இப்புயல் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், காவல்துறையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், அரசு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலோபர் புயல் அரபிக் கடலில் உருவெடுத்து, குஜராத்தை நெருங்கியுள்ளது. தற்போது இப்புயல் காற்றின் வேகம் மணிக்கு 220 கி.மீ என்ற அளவில் உள்ளது. நிலோபர் புயல் மிகத் தீவிரமானதாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குஜராத் கடற்கரை அருகே கரையைக் கடக்கும் போது மணிக்கு 60-70 கி.மீ என்ற அளவில் குறைந்து விடும். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இப்புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக குஜராத்தில் கடலோரப் பகுதியிலுள்ள 8 மாவட்டங்களி லிருந்து 128 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்குகிறது.
வரும் வெள்ளிக்கிழமை கடலோரப் பகுதிகளான சவுராஷ் டிரம் மற்றும் கட்ச் பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது படைப்பிரிவுகள் குஜராத்தில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
“புயல் சேதத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம். நிலோபர் புயல் வலுவிழக்க வேண்டும் எனவும், பெரிய சேதத்தை ஏற்படத்தக்கூடாது எனவும் பிரார்த்தித்துக் கொள் வோம்” என குஜராத் முதல்வர் ஆனந்தி பென் தெரிவித்துள்ளார்.
முன் ஏற்பாடுகள்
கட்ச் மாவட்ட ஆட்சியர் மகேந்திர படேல் கூறியதாவது:
புயல் தாக்கும்போது, மின்விநி யோகம் சீராக இருப்பதை உறுதி செய்யும் பணியில் குஜராத் மின்வாரியத் துறையினர் ஈடுபட்டுள் ளனர். மற்ற பகுதிகளிலுள்ள கிராமங் களில் குடிநீரை போதுமான அளவில் இருப்பு வைக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் விடுமுறைகளை ரத்து செய்துவிட்டு பள்ளிக்கூடங்களைத் திறந்து, வெளியேற்றப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்குத் தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT