Published : 27 Feb 2014 07:16 PM
Last Updated : 27 Feb 2014 07:16 PM

சிந்துரத்னா கப்பல் விபத்து: உயிரிழந்த 2 அதிகாரிகளின் உடல்கள் மீட்பு

மும்பையில் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட விபத்தில் காணமால் போன கடற்படை அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் இன்று மீட்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் நேற்று காலை திடீரென மர்மமான வகையில் புகை பரவியது. இதை சுவாசித்த கடற்படை வீரர்களில் 7 பேர் மூச்சுத் திணறி மயக்க நிலைக்குச் சென்றனர். கப்பலில் இருந்த 2 வீரர்களின கதி தெரியவில்லை.

உடல் நலக் குறைவு ஏற்பட்ட 7 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருவர் கப்பலின் எந்த பகுதியில் உள்ளனர் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், விபத்தில் காணாமல் போன கடற்படை அதிகாரிகளான கபிஷ் முவால் மற்றும் மனோ ரஞ்சன் குமார் ஆகியோரைத் தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.

இதனிடையே, பாதுகாப்பு அமைச்சக உத்தரவினப்டி, கடற்படை விபத்து தொடர்பாக உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, கடந்த சில மாதங்களாக கடற்படை கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதற்கு தார்மீக பொறுப்பேற்று கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x