Published : 08 Jan 2017 11:09 AM
Last Updated : 08 Jan 2017 11:09 AM

2016-ல் ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,018 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் கடந்த 2016-ம் ஆண்டில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.1,018 கோடி செலுத்தியுள்ளனர்.

2015-ல் இக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 859 கோடி வருவாய் வந்தது. இந்நிலையில் 2016-ம் ஆண்டில் இக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.1,018 கோடி செலுத்தியுள்ளதாக திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “முதன்முறையாக 2016-ல் உண்டியல் வருமானம் ஆயிரம் கோடியை தாண்டியுள் ளது. இதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ. 85 கோடி கிடைத் துள்ளது. கடந்த ஆண்டில் 2.66 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இது 2015-ம் ஆண்டை விட 20.73 லட்சம் அதிகமாகும். பக்தர்களுக்கு 10.34 கோடி லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எந்த ஆண்டிலும் இல் லாத சாதனையாகும்” என்றார்.

இதனிடையே உண்டியல் வருமானம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் குறைந்து வருகிறது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களை திரும்பப் பெறுவதை வங்கிகள் கடந்த டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்திக் கொண்டன. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் அதிக அளவில் செலுத்தி வருகின்றனர். இதனால் உண்டியல் வருமானம் குறைந்துள்ளது.

இக்கோயிலில் தினசரி உண்டியல் வருமானம் ரூ. 2.5 கோடி முதல் 3.5 கோடி வரை இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் சில நாட்கள் ரூ. 4 கோடியை தாண்டியது. ஆனால் ஜனவரி மாதத்தில் ரூ. 2 கோடியை கூட தாண்டாமல் உள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள வங்கிகள் மறுத்துவிட்டதால், இவற்றை பெற்றுக்கொள்ளும்படி ரிசர்வ் வங்கிக்கு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கடிதம் எழுதியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x