Published : 28 Jun 2016 08:01 AM
Last Updated : 28 Jun 2016 08:01 AM

திருமலையில் புதிய சர்ச்சை: திருப்பதி ஏழுமலையானின் முதல் தரிசனம் யாதவ குலத்தோருக்கு தொடர்ந்து கிடைக்குமா?

ஏழுமலையான் கோயிலில் தினந் தோறும் முதல் சுவாமி தரிசனத் துக்கு சன்னதி யாதவ வம்சத் தினரே அனுமதிக்கப்படுகின்றனர். அரசு ஊழியர்களாக்கப்பட்ட இவர்கள் தற்போது 65 வயதைத் தொட்டுள்ளனர். பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருப்பதால், இவர்களுக்கு ஏழுமலையானின் முதல் தரிசன வாய்ப்பு தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகா விஷ்ணு, தன்னை விட்டுப் பிரிந்த மகாலட்சுமியை தேடி பூலோகத்திற்கு பெருமாளாக வந்தபோது, அவர் மயங்கி விழுந்து விடுகிறார். அப்போது அவரை சுற்றிலும் புற்று கட்டி விடுகிறது. இந்நிலையில், பிரம்மாவும், சிவனும் பசுவும், கன்றுமாக மாறி பூலோகத்திற்கு வருகின்றனர். இதில் தினமும் பசு புற்றில் உள்ள பெருமாளுக்கு தானாகவே பாலை சுரந்து பெருமாளின் பசியை ஆற்றுகிறார்.

இதனை கவனித்த பசுவை காக்கும் யாதவன், அந்த புற்றை அடித்து துவம்சம் செய்யும் போது, புற்றுக்குள் பெருமாள் காட்சி அளிக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி கோயிலின் தல புராணமும் கூட.

பூலோகத்தில் பெருமாள் முதலில் யாதவருக்கு காட்சி அளித்ததால், இன்றுவரை திருப்பதி ஏழுமலையான் கோயி லில் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் களுக்கே முதல் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுப்ரபாத சேவைக்கு அதிகாலை 2.30 மணியளவில், கோயில் அர்ச்சகர் களை அழைத்து வருவது சன்னதி யாதவ குலத்தவர்களே. இது வம்சாவழியாக வரும் ஒரு சம்பிரதாயமாகும்.

ஆகம விதிகளின்படி அச்சு பிசகாமல் ஒவ்வொரு கைங்கர் யங்களும் நடைபெற்று வரும் திருப்பதி ஏழுமலையான் கோயி லில், அர்ச்சகர்கள், ஜீயர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச் சார்யாரின் வம்சாவளிகள் உட்பட சன்னதி யாதவ குலத்தோரின் பழக்கவழக்கங்கள் எதுவும் மாறவில்லை.

தினமும் அதிகாலை 2.30 மணிக்கு அர்ச்சகர்களுடன் வரும் சன்னதி யாதவ குலத்தோர் தீப்பந்த வெளிச்சத்தில் கோயி லுக்குச் சென்று ஏழுமலையானின் கதவை திறக்கிறார்கள். பின்னர் இவர்களுக்கு முதல் தரிசனமும், ஆரத்தியும் வழங்கப்பட்ட பின் னரே, சுப்ரபாத சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

காலை, இரவு வேளைகளிலும் சன்னதி யாதவ வம்சாவளியினர் அர்ச்சகர்களை அழைத்து வருகின் றனர். இரவு ஏகாந்த சேவைக்குப் பின்னர் சன்னதி யாதவ குலத் தோர்தான் கதவை பூட்டி சாவியை ஜீயர் சுவாமிகளுக்கு வழங்குகின் றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு, ஆந்திர அரசு மிராசு வழக்கத்தை ரத்து செய்தது. இதனால், யாதவ குலத்தோர் தங்களது மிராசு பட்டத்தை இழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசு சன்னதி யாதவ குலத்தோரை தேவஸ்தான ஊழியர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டது. ஆயினும் தற்போது வரை எந்தவித பிரச்சினைகளும் இன்றி பழைய கலாச்சாரமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது புதிய பிரச்சினை தோன்றி உள்ளது. அரசு ஊழியர்கள் 65 வயது நிரம்பிய உடன் ஓய்வு பெற வேண்டும் என்ற நிலையில், தற்போது சன்னதி யாதவ வம்சத்தில் பணியாற்றுபவர் ஓய்வு பெறும் வயதை தொட்டுள்ளனர். தேவஸ்தானமும், தற்போது சன்னதி யாதவ வம்சத்தினரை ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சன்னதி யாதவ குலத்தோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி தூக்கி உள்ளனர். வம்சாவழியாக ஏழுமலையா னுக்கு கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்களுக்கு அரசு வாய்ப்பு வழங்கியது போன்று சன்னதி யாதவ குலத்தோரும் தொடர்ந்து பணியில் நீடிக்க வாய்ப்பு வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறினால் இவர்கள் நீதிமன் றத்தை நாட முடிவு செய்துள்ள தாக சன்னதி யாதவ வம்சத்தைச் சேர்ந்த நரசிம்ம யாதவ் நேற்று திருப்பதியில் செய்தியாளர் களிடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x