Published : 01 Oct 2014 09:16 AM
Last Updated : 01 Oct 2014 09:16 AM
மகாராஷ்டிரத்தில் சிவேசனா கட்சியுடனான கூட்டணியை முறித்து கொண்ட பாஜக மீது ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியடைந் துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’, இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த சிவசேனாவும், பாஜகவும் வரும் 15-ம் தேதி நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை தனித்தனியே சந்திக்க முடிவு செய்துள்ளன.
மாறியுள்ள அரசியல் சூழ்நிலை யில், தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிர் வாகிகளுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: “தெற்கு மும்பையில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள் வது குறித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி களுடன் பாஜக தலைவர்கள் அனந்த் குமார், ரவீந்திர புசாரி உள் ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜகவை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கள் விமர்சனம் செய்துள்ளனர்.
கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு முன்பு எங்களிடம் ஏன் ஆலோசனை நடத்தவில்லை? இந்துத்துவக் கொள்கையில் இருந்து பாஜக விலகிச் செல்வது ஏன்? உங்களின் செயலின் மூலம் இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்துள்ளீர்கள்.
உங்களின் சுயநலம் காரண மாகத்தான் இந்த முடிவை எடுத் தீர்களா? இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்காளர் களிடம் ஆதரவு கேட்டுச் செல்வீர் கள்? உண்மையான நண்பனை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தங்க ளின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
மராட்டியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் தேசியவாத காங் கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த வர்களுக்கு தேர்தலில் போட்டி யிட பாஜக வாய்ப்பு அளித்துள்ள தற்கும் ஆர்.எஸ்எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சிவசேனா கட்சியின் பத்திரிகையில் செய்தி வெளி யிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT