Last Updated : 01 Jan, 2016 02:36 PM

 

Published : 01 Jan 2016 02:36 PM
Last Updated : 01 Jan 2016 02:36 PM

புத்தாண்டு வியூகம்: சுற்றுப் பயணங்களை சுருக்குகிறார் மோடி

கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த 2016-ல் தவிர்க்க முடியாத சில சர்வதேச மாநாடுகளில் மட்டும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக அவரது வெளிநாடு பயணங்கள் அமைந்தன. ஆட்சி அமைத்த 19 மாதங்களில் அவர் 23 நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் புத்தாண்டு ஆட்சி முறை திட்டங்கள் குறித்து அவரது அலுவலக அதிகாரிகளிடம் 'தி இந்து' (ஆங்கிலம்) தொடர்பு கொண்டு கேட்டபோது, 'பிரதமர் கடந்த ஆண்டில் இருந்த சில விஷயங்களை தவிர்த்து புதிய வழிமுறைகளை மேற்கொள்ளவே எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே கடந்த ஆண்டில் தொடர்ந்து கொண்டிருந்த சில விஷயங்கள் இந்த ஆண்டில் இருக்காது' என்றனர்.

அதற்கு பதிலாக, வெளிநாட்டு தலைவர்களின் வருகை எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை தங்களது நாடுகளுக்கு வரவேற்க மிகுந்த ஆர்வம் காட்டிய சில தலைவர்கள் இந்தியாவுக்கு வர உள்ளனர்.

முதலாவதாக ஜனவரியில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே வர உள்ளதாகவும், அவர் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் வருகையின் பிரம்மாண்டத்தோடு அந்நாட்டுடன் பாதுகாப்பு, அணுஆயுதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம்.

அடுத்ததாக நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒளி, முதல் 3 மாதங்களிலும் அவரை அடுத்து சர்வதே மகளிர் மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோரும் இந்தியாவுக்கு வர இருக்கின்றனர்.

செய்யப்போவது என்ன?

2016ம் ஆண்டில் வெளிநாட்டு பயணங்களை குறைக்கும் பிரதமர் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x