Published : 20 Oct 2014 09:13 PM
Last Updated : 20 Oct 2014 09:13 PM
பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு ‘பகுதி நேர அமைச்சர்’ என்று எதிர்க்கட்சியினர் தொடுத்த விமர்சனங்களுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார்.
நிதியமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வரும் அருண் ஜேட்லி இது பற்றிக் கூறும்போது, “என்னை பகுதி நேர அமைச்சர் என்று அழைப்பதை நான் அறிவேன், ஆனால் நான் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்” என்று இ.டி.நவ் சானலில் அவர் கூறினார்.
சமீபமாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது, “அருண் ஜேட்லி பகுதி நேர பாதுகாப்பு அமைச்சர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாட்டின் பாதுகாப்பு பற்றி மூச்சுக்கு மூச்சு பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி 283 உறுப்பினர்களில் ஒருவரைக் கூட முழுநேர பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க முடியாமல் உள்ளது விசித்திரம்தான்” என்று சாடியிருந்தார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, “ஆட்சி அமைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும், ஒரு முழு நேர பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட முடியவில்லை என்பது கவலைக்குரிய விஷயமே” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் ‘தீர்மானமாக நான் தான் பாதுகாப்பு அமைச்சர்’என்று ஜேட்லி பதில் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT