Published : 08 Oct 2014 09:52 AM
Last Updated : 08 Oct 2014 09:52 AM
கேரளத்தில் 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் சமரசத்துக்கு இடமில் லை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சா ரத்தை உம்மன் சாண்டி நேற்று திருவனந் தபுரத்தில் தொடங்கி வைத்து பேசும் போது, “மதுபானம் கிடைப்பதை படிப்படியாக குறைத்து, வரும் 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயன்று வருகிறது. அரசின் நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் வேண்டும். பூரண மதுவிலக்கை நோக்கமாகக் கொண்ட எங்கள் செயல்பாடுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த நோக்கத்தில் விரும்பிய பலனைப் பெற மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார். கேரளத்தில், காந்தி ஜயந்தி, ஸ்ரீநாராயண குரு பிறந்த நாள், நல்ல வெள்ளி போன்ற விடுமுறை நாள்களில் மதுக்கடைகளை மூடுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 5 நட்சத்திர ஹோட்டல்கள் தவிர பிற ஹோட்டல்களில் இயங்கிவந்த சுமார் 700 மதுக்கூடங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கையாக, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT