Published : 05 Mar 2017 11:15 AM
Last Updated : 05 Mar 2017 11:15 AM

திருப்பதியில் காணிக்கையாக வந்த ரூ.8.29 கோடி பழைய நோட்டை டெபாசிட் செய்ய அனுமதியுங்கள்: ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இப்போது உண்டியல் வருமானம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,100 கோடியை தாண்டி உள்ளதாக தேவஸ்தானம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சராசரியாக தினமும் ரூ. 3 கோடி காணிக்கையாக கிடைத்து வருகிறது. இதுதவிர தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதன் பிறகும் திருப்பதி உண்டியலில் செல்லாத ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்னர்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரையில் ரூ.8.29 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் பல முறை முயற்சி செய்தது. ஆனால் வங்கிகள் ஏற்கவில்லை.

இதுகுறித்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பல முறை கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் வரவில்லை.

இந்நிலையில், தங்களிடம் உள்ள ரூ.8.29 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி கோரி ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் சார்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால், செல் லாத நோட்டுகளை ஏழுமலையான் உண்டியலில் பக்தர்கள் செலுத்தினாலும் அது வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x