Published : 04 Oct 2014 09:29 PM
Last Updated : 04 Oct 2014 09:29 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. தேவையில்லாத பதட்டம் வேண்டாம் என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்ஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு மக்கள் பதற்றமடைய வேண்டாம். மேடம் ஜெயலலிதா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகள் நார்மலாக உள்ளது” என்றார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியில் உண்மையில்லை என்று அவர் மேலும் அழுத்தமாகக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT