Published : 26 Apr 2017 09:56 AM
Last Updated : 26 Apr 2017 09:56 AM

முறைகேடுகளை தடுக்க ஜூன் மாதம் முதல் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

முறைகேடுகளை தடுக்க ‘ஸ்ரீவாரி அனுக்கிரஹம்’ என்ற பெயரில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவின் 2 ஆண்டு பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இதையொட்டி அறங்காவலர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுக் கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஏழுமலையானின் கருணை யால் எனது 2 ஆண்டு கால பதவியில் பல்வேறு பணிகளைச் சிறப்பாக செய்து முடித் துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 2 ஆண்டுகளில் பக்தர் களுக்கு உகந்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க எலெக்ட்ரானிக் இயந்திரம் மூலம் குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்ரீவாரி அனுக்கிரஹம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.

ஏழுமலையானுக்கு சொந்த மான 7,000 கிலோ தங்கம் 2.5 சதவீத வட்டி தரும் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் பக்தர்கள் செலுத்திய தலைமுடி காணிக்கையை ஏலம் விட்டதன் மூலம் ரூ.5.27 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்ரீசைலம் வனப்பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் செம்மரக் கன்றுகள் நடப்படும்.

இவ்வாறு சதலவாடா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x