Last Updated : 06 Oct, 2014 03:21 PM

 

Published : 06 Oct 2014 03:21 PM
Last Updated : 06 Oct 2014 03:21 PM

மோடி பிரதமரான பின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னரே, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததாக அமித் ஷா கூறினார்.

மகாராஷ்டிராவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட பாஜக தலைவர் அமித் ஷா, "மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது. இதே போல அக்டோபர் மாத இறுதிக்குள் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது" என்றார்.

மேலும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் ஊழல் ஆட்சியை மட்டுமே நடத்தி உள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x