Published : 20 Sep 2013 10:10 PM
Last Updated : 20 Sep 2013 10:10 PM

மும்பை: போலீஸிடம் இருந்து பயங்கரவாதி தப்பி ஓட்டம்

குஜராத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி அஃப்ஸல் உஸ்மானி நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் போலீஸ் காவலில் இருந்து தப்பினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரத், ஆமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்ஸல் உஸ்மானி, இவ்வழக்கில் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.

ராய்கட் மாவட்டம் தலோஜா சிறையில் இருந்து, தெற்கு மும்பையில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குக் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உபயோகிப்பட்ட வாகனங்களை பயங்கரவாதிகளுக்கு தந்து உதவியதாக, உஸ்மானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x