Published : 28 Dec 2013 03:47 PM
Last Updated : 28 Dec 2013 03:47 PM

முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள்

டெல்லி முதல்வராக இன்று அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஒவ்வொருவரின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் அரவிந்த் உள்துறை, நிதி, ஊழல் கண்காணிப்பு, மின் திட்டம், சேவைகள் துறைகளை தன் வசம் வைத்துக்கொள்கிறார்.

மனிஷ் சிசோதயா, கல்வி, பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறைகளை கவனித்துக் கொள்கிறார். சோம்நாத் பார்தி, நிர்வாக சீர்திருத்தம், சட்டம், சுற்றுலா, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகள் அமைச்சராகிறார். சவுரவ் பரத்வாஜ் போக்குவரத்து, உணவு வழங்கல், சுற்றுச்சூழல் துறையையும், ராக்கி பிர்லா மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையையும், கிரிஷ் சோனி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின துறையை கவனித்துக் கொள்கின்றனர். அமைச்சர் சத்யேந்திரா ஜெயின், சுகாதாரம், தொழிற்சாலை துறைகளை கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x