Published : 24 Oct 2014 10:05 PM
Last Updated : 24 Oct 2014 10:05 PM
ஏதேனும் ஒரு நாள் நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸின் தலைவராக முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் கூறியிருப் பதாவது: 2013-ம் ஆண்டு ஜனவரியில் ஜெய்ப்பூர் மாநாட் டில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக அறிவித்த முடிவு சரியானதுதான்.
சோனியாவும் ராகுலும் அதிக பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். ஊடகங்களை அதிகம் சந்திக்க வேண்டும். காங் கிரஸ் கட்சியினரிடம் கட்டுப்பாடு, தன்னம்பிக்கை சரிந்துள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால், அதனை மேம்படுத்த முடியாது என்பதையோ, உரிய வழிகாட்ட முடியாது என்பதையோ ஒப்புக் கொள்ள முடியாது. கட்சியை மறுகட்ட மைப்பு செய்வதற்காக, செயல் பாட்டு திட்டங்களை வகுத்து, அதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும், என்றார்.
நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒருநாள் அதுவும் நடக்கும். ஆனால், அது எப்போது நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. காலவரையறை கூற முடியாது. எதன்மீதும் ஆவல் கொள்வதற்கு எனக்கு அதிக வயதாகி விட்டது” என்றார்.
காங்கிரஸுக்கு தலைமை வகிக்க ஒரே குடும்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “ராகுல்காந்தி அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தலைமை வகிக்க நேரிட்டது.
அதற்காக மற்ற இளைய தலைவர்கள் எழுச்சி பெற முடியாது என்று அர்த்தமல்ல. சச்சின் பைலட் வளர்ந்திருக்கிறார் அல்லவா” என்றார்.
தொண்டர்களிடம் பேசுங்கள்
கட்சித் தலைமை, தொண்டர் களிடம் பேசுவதில்லை என்ற கருத்து தவறானது. நான் கூட அவ்வபோது தொண்டர்களைச் சந்திக்கிறேன். சோனியா, ராகுலை அரிதாகத்தான் பார்க்கவோ, அவர்கள் பேசுவதைக் கேட்கவோ முடிகிறது. இதனால் காங்கிரஸ் மாலுமி இல்லாத கப்பலாக மாறுகிறது என்ற கருத்து உலவுகிறது. பொதுமக்களிடம் பேச வேண்டும் என அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
சோனியா, ராகுலுக்காக இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா என்ற கேள்வியை சோனியாவைப் பார்த்துதான் கேட்க வேண்டும். ஆனால், துணைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அது ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது, அடுத்த தலைமுறையிடம் கட்சியை கைமாற்றும் சிறந்த உத்தியாகக் கருதுகிறேன். இது கட்சியின் எல்லா மட்டத்திலும் நிகழ வேண் டுமா என்றால், அதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
ராகுலின் தேர்வும் தலைமையும்
ஜெய்ப்பூர் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்டது கட்சிக்குள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியேயும் வரவேற்பைப் பெற்றது. தலை மையைப் பொறுத்தவரை, எனது தலைமுறையில் அனை வராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காங்கிரஸ் தலைவர் என்றால் அது சோனியா காந்திதான். இளம் தலைமுறையினரிடம் ராகுல் காந்தி பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார். மற்ற தலைவர்கள் வளரக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல.
இவ்வாறு, ப.சிதம்பரம் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT