Last Updated : 07 Oct, 2014 10:00 AM

 

Published : 07 Oct 2014 10:00 AM
Last Updated : 07 Oct 2014 10:00 AM

அரசு விளம்பரங்களில் கட்சி சார்பு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழு பரிந்துரை

அரசு விளம்பரங்களில், அரசியல் கட்சிகளின் பெயர், கட்சித் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், செலவுகளை ஒழுங்குமுறைப் படுத்துதல் தொடர்பாக, பேராசிரியரும் கல்வியாளருமான என்.ஆர். மாத மேனன் தலைமையில், மக்களவை முன்னாள் செயலாளர் டி.கே. விஸ்வநாதன், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோரடங்கிய மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

அரசு விளம்பரங்களால், பொது மக்களின் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தங்களின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதில், குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர்களின் பெயரும் படங்களும் மட்டுமே அரசு விளம்பரங்களில் வெளி யிடப்பட வேண்டும். இந்த விளம்பரங்களில் அரசியல் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படும் விளம் பரங்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்க, தேர்தல் ஆணை யத்துக்கும் இக்குழு பரிந்துரைத் துள்ளது.

மேலும், முக்கியப் பிரமுகர் களின் பிறந்தநாள், நினைவுநாட் களில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஒரேயொரு விளம்பரம் வெளியிட்டால் போதும் எனவும் இக்குழு பரிந் துரை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x