Published : 20 Oct 2014 10:04 AM
Last Updated : 20 Oct 2014 10:04 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது. அநேகமாக நவம்பர் 24-ம் தேதி கூட்டத் தொடர் தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT