Last Updated : 22 Aug, 2016 01:51 PM

 

Published : 22 Aug 2016 01:51 PM
Last Updated : 22 Aug 2016 01:51 PM

காஷ்மீர் பெல்லட் பாதிப்பில் 14% பேர் 15 வயதுக்குட்பட்டோர்!

காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதத்தினர் 15 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.

எட்டு வயதான ஜூனைத் அகமத் காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சமீபத்திய சான்றாகி உள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜூனைத் அகமத் பாதுகாப்பு படையின் தக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்

இதுகுறித்து ஜூனைத்தின் உறவினர் ஒருவர் கூறும்போது, “ஜூனைத் அகமத் தனது வீட்டின் அருகே குழுமியிருந்த கூட்டத்தினரோடு நின்று கொண்டிந்தான் அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினரின் வண்டியை கண்டு அலறியுள்ளான். அவனது வயதை கூட பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் பெல்லட் கன்னால் அங்கு குழுமியிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலால் ஜீனைதின் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

கடந்த ஜுலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராகயிருந்த புர்கான் வானி கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் கலவரங்கள் ஏற்பட்டது.

கலவரங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதில் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள்.

பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 14% பேர் ஜுனைத் அகமத்தை போன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூனைத்துக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறும் போது, அவனது மார்பின் பல பகுதிகளில் பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை ஜூனைத் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிக அருகில் நின்றிருந்தான் என்றால் அவன் நுரையீரல் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும்” என்றார்.

933 பேர்...

இதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 933 பேர் பெல்லட் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனை கண் மருத்துவர் சஜத் கான்டே கூறும்போது, "440 பேருக்கு பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் கன்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் 15 வயதுக்கு குறைவானவர்கள்.

இவர்களில் 40 பேருக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இன்னும் 250 பேருக்கு சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். வயதானவர்களை காட்டிலும் சிறு வயதினருக்கு அறுவை சிகிச்சை செய்வது கடினமாக உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x