Published : 20 Oct 2014 08:09 PM
Last Updated : 20 Oct 2014 08:09 PM
ஹரியாணா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 83% கோடீசுவரர்கள் என்று ஹரியாணா தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.
புதிய சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் சராசரி சொத்து நிலவரம் ரூ.12.97 கோடி என்கிறது இந்த ஆய்வு.
2009-ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.71 கோடியாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு சுமார் 2 மடங்கு பக்கம் அதிகரித்துள்ளது.
கட்சி அளவில், இந்திய தேசிய லோக் தள் வேட்பாளர்கள் பெரும் கோடீசுவரர்களாக இருக்கின்றனர். இதில் பணக்கார வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.01 கோடி. காங்கிரஸ் உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.45 கோடி. பாஜக உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.5 கோடி.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 சுயேட்சை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.95 கோடி. வெற்றி பெற்றவர்களில் பணக்கார வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.212 கோடி.
ஹரியாணாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 21 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மீண்டும் வெற்றி பெற்ற இவர்களது சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.4 கோடியிலிருந்து 13.8 கோடியாக அதிகரித்துள்ளது.
2009-2014-ஆண்டிற்கிடையே கட்சி மட்டத்தில் அதிகரித்துள்ள சராசரி சொத்து மதிப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு வளர்ச்சி ரூ.8.49 கோடி, லோக்தள் கட்சியின் வளர்ச்சி ரூ.8.22 கோடி. பாஜக சொத்து மதிப்பு வளர்ச்சி 2.13 கோடி.
வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களில், பரிதாபாத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபுல் கோயலின் சொத்து மதிப்பு ரூ.106 கோடி.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் 10 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT