Published : 07 Oct 2014 09:57 AM
Last Updated : 07 Oct 2014 09:57 AM
பிரதமர் நரேந்திர மோடி குறித்து புகழ்ந்து பேசுவதை நிறுத்துமாறு காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச் சருமான சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் கட்சி எச்சரிக் கை விடுத்துள்ளது. இதற் கிடையே தான் பாஜகவை ஆதரிக்கவில்லை என சசி தரூர் கூறி யுள்ளார்.
இதுகுறித்து கேரள காங்கிரஸ் துணைத்தலைவர் எம்.எம்.ஹசன் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்துக்கு முற்றிலும் மாறாக சசி தரூர் மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். முதல்கட்டமாக இதுபோன்று புழ்ந்து பேசுவதை நிறுத்துமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார். இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் கூறும்போது, “காங்கிரஸ் கட்சிதான் சசி தரூரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. கட்சியின் கொள்கைகளை மீறி அவர் பேசக்கூடாது. மீறினால் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து சசி தரூர் கூறும்போது, “தூய்மையான இந்தியா பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பதில் அளித்ததன் மூலம் பாஜகவின் இந்துத்துவா கொள்கையை ஆதரிப்பதாக அர்த்தம் ஆகாது. நான் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்” என்றார்.
‘தூய்மையான இந்தியா' என்ற திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உட்பட பலதரப்பு பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற சசி தரூர், பிரதமர் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT