Published : 04 Mar 2014 12:30 PM
Last Updated : 04 Mar 2014 12:30 PM

பாலியல் பலாத்காரம்: கன்னித்தன்மை சோதனை நடத்தக்கூடாது; புதிய வழிகாட்டு நெறிகளை அறிவித்தது மத்திய அரசு

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்ய நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அந்த சோதனையை மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.

பலாத்காரத்துக்குள்ளான பெண்களுக்கான சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிகளையும் அது அறிவித்துள்ளது.

பலாத்காரத்துக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகள் அவர்களுக்காக குற்றத் தடயவியல் ஆய்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்ய அதற்கென தனி அறை ஒதுக்கவேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

நிபுணர்களின் ஒத்துழைப்புடன் சுகாதார ஆய்வுத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து வழிகாட்டு நெறிகளை தயாரித்துள்ளன.

பலாத்காரத்துக்கு உள்ளான பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் மருத்துவ சோதனை நடைமுறைகள் கொடியவை. இதற்கு முடிவு காணவும் பாலியல் தாக்குதல் வழக்குகளை திறம்பட கையாளவும் வழிகாட்டு நெறிமுறைகள் பேருதவி புரியும் என கருதப்படுகிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவோர் மன ரீதியிலும் சமூக ரீதியிலும் பெரிய அளவுக்கு பாதிப்படைகிறார்கள். அதற்கு தீர்வுகாணும் யோசனைகள், உளவியல் ஆலோசனைகள் அடங்கிய கையேட்டையும் சுகாதார ஆராய்ச்சி துறை தயாரித்துள்ளது.

பாலியல் வன்முறைக்கு உள் ளானவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவ மையங்களில் இந்த வழிகாட்டு நெறிகள் வழங்கப் பட்டுள்ளன.

இந்த நெறிகளை உருவாக்க பாலியல் வன்முறை ஆய்வு முனைப்பு பிரிவின் செயலர் டாக்டர் எம்.இ.கான் தலைமையில் பாலினம் மற்றும் சுகாதாரம் தொடர் பான நிபுணர் குழுவை 2011 நவம்ப ரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலர் டாக்டர் வி.என்.கடோச் அமைத்தார்.

பின்னர் இந்த வழிகாட்டு வரைவு நெறிகளை தயாரிக்கும் பொறுப்பு வார்தா சேவாகிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவி யல் நிறுவனத்தின் கூடுதல் பேராசிரியர் இந்திரஜித் கண்டேகரிடம் கொடுக்கப்பட்டது.

பொதுமக்களும் நிபுணர்களும் இந்த வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்க கோரப்பட்டு 2013ம் ஆண்டு டிசம்பர் 16ல் வழிகாட்டு நெறிகள் சுற்றுக்கு விடப்பட்டன.

டாக்டர் கண்டேகர் இந்த விவகாரத்தில் தனிநபராக மிகுந்த ஈடுபாடுகாட்டி பாலியல் வன்முறை வழக்குகளை திறம்படி கையாள் வது பற்றி மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். தேசிய அளவிலும் அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது.

இதுபற்றி கண்டேகர் கூறிய தாவது:

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்கள் போலீஸாரை அணுகிய மறுகணத்திலிருந்தே ஏராளமான மனம் கலங்க வைக்கும் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களின் விசாரணையால் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.

பாதிப்புக்குள்ளானவர்கள் அந்தரங்கம் காப்பாற்றப்பட இத் தகைய நிலைமைகளில் மருத்துவ மனைகளில் தனி அறை வழங்க இந்த வழிகாட்டு நெறிகள் கட்டாயமாக்குகிறது, வழிகாட்டு நெறிகளில் உள்ளபடி மருத்துவமனைகளில் தேவையான அத்தியாவசிய சாதனங்களை வைத்திருப்பது அவசியமாகும்.

இந்த வழக்குகளில் மருத்துவ ஆய்வு செய்யும்போதும், வெளியில் தகவல் சொல்லும்போதும் வழிகாட்டு நெறிகளில் உள்ளபடி டாக்டர்களும் ஊழியர்களும் செயல்பட விழிப்புணர்வு பயற்சி வகுப்பு எடுக்கப்பட வேண்டும்.

மருத்துவ சோதனை நடத்தும் போது டாக்டரை தவிர மூன்றாம் நபரை அனுதிக்கக்கூடாது. டாக்டர் ஆணாக இருந்தால் அவருக்கு துணைபுரிய பெண் உதவியாளர் இருப்பது கட்டாயம்.

பால்வினை நோய்கள், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி போன்றவற்றுக்கு சிகிச்சை தருவதற்கும் இந்த வழிகாட்டு நெறிகள் அறிவுறுத்து கின்றன. இவர்களுக்கு உளவியல் ஆலோசனை, சமூக அரவணைப்பு, உரிய மேல் சிகிச்சை தர வழிகாட்டு நெறிகள் உதவுகின்றன.

மருத்துவர்கள் தமது குறிப்பில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரபணு சோதனைக்கும் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம், காவல்துறை கேட்டுக்கொண்டால் மட்டுமே பலாத்காரத்துக்கு உள்ளானர் களை டாக்டர்கள் மருத்துவ ஆய்வு செய்வார்கள். இப்போது பலாத் காரத்துக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையை அணுகி நடந்தது பற்றி தெரிவித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலே டாக்டர்கள் மருத்துவ ஆய்வு நடத்தலாம்.

தான் முடிவாக சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் அதற் கான காரணத்தை தமது ஆய்வு அறிக்கையில் குற்றத்தடயவியல் நிபுணர்கள் தெரிவிப்பது கட்டாயம் என்றும் வழிகாட்டு நெறிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாத்காரக்கு உள்ளானவர் களிடம் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு முன் அவரிடம் சோத னையில் என்னென்ன செய்வோம் என்பதை விளக்கமாக தெரிவித்து முன்அனுமதி பெறவேண்டும். இப்படி செய்வதால் மனித உரிமை மீறல்களுக்கோ அல்லது வேறு அநீதிகளுக்கோ இடம் இருக்காது என்றார் கண்டேகர்.

கண்களால் பார்த்து பரிசோதனை

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பிறப்பு உறுப்பில் காயங்கள் இருக்கிறதா என்பதை டாக்டர்கள் கை விரல்களை வைத்து பரிசோதனை செய்வார்கள். இதுவே இரட்டை விரல் சோதனையாகும். அந்த காயம் பட்ட இடத்தில் கை விரல் பட்டால் வலி மேலும் அதிகமாகும்.

பாலியல் வன்கொடுமையால் மனதளவில் பாதிக்கப்பட்டு வேதனையுடன் வரும் பெண்களை மேலும் வேதனைப் படுத்தக்கூடாது. மென்மையாக பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இரட்டை விரல் சோதனை முறையில் சுகாதாரத்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது.

புதிய நடைமுறைகளின்படி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களை, தனி அறையில், கை விரல்களை வைக்காமல் கண்ணால் பார்த்து டாக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இவை தவிர ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்தால் கட்டாயம் ஒரு பெண் நர்ஸ் உடன் இருக்க வேண்டும். பெண் நோயாளிக்கு வலி ஏற்படாமல் பரிசோதனை செய்ய வேண்டும். பெண் நோயாளி முகம் சுளித்தால் பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x