Published : 02 Jan 2016 09:40 AM
Last Updated : 02 Jan 2016 09:40 AM
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமியை தரிசிக்க 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று முன் தினம் இரவு முதலே பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கினர். இதனால் நேற்று சர்வ தரிசனம் செய்ய 12 மணி நேரமும் நடைபாதை வழியாக வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். புத்தாண்டையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் வண்ண விளக்குகளாலும் பல வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ் தானம் சார்பில் சிற்றுண்டிகள், பால், உணவு பொட்டலங்கள், குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.
திருப்பதி-திருமலை இடையே 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோன்று நடைபாதையிலும் பக்தர்கள் 24 மணிநேரமும் அனுமதிக்கப் பட்டனர். நேற்று காலை 5.30 மணியில் இருந்து பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். நேரடியாக வந்த விஐபி பக்தர்கள் மட்டுமே பிரேக் தரிசனத்தில் அனுப்பப்பட்டனர். சிபாரிசு கடிதங்கள் முற்றிலு மாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT