Published : 05 Jul 2016 08:06 PM
Last Updated : 05 Jul 2016 08:06 PM
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 2016ஆம் ஆண்டின் உயர்நீதிமன்றங்கள் (பெயர்திருத்த) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை வழங்கியது.
2016ஆம் ஆண்டின் உயர்நீதிமன்றங்கள் (பெயர்திருத்த) மசோதா “பம்பாய் உயர்நீதிமன்றம்” என்பதை “மும்பை உயர்நீதிமன்றம்” என்றும், “மதராஸ் உயர்நீதிமன்றம்” என்பதை “சென்னை உயர்நீதிமன்றம்” என்றும் பெயரை திருத்த உதவி செய்யும்.
பின்னணி:
பம்பாய் உயர்நீதிமன்றம் மற்றும் மதராஸ் உயர்நீதிமன்றம் ஆகியவை அவை அமைந்துள்ள நகரங்களின் பெயர்களை ஒட்டி பெயர் சூட்டப்பட்டவையாகும். இந்த நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதன் விளைவாக, இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களையும் அதற்கேற்ப திருத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களை திருத்துவதற்கான கருத்துரையை செயல்படுத்தும் வகையில் தற்போது மத்திய சட்டம் எதுவும் இல்லை. இந்தச் சட்டம்அந்தத் தேவையை நிறைவு செய்வதாக அமையும்.
இந்த மசோதா பம்பாய் உயர்நீதிமன்றம் என்பதை மும்பை உயர்நீதிமன்றம் எனவும், மதராஸ் உயர்நீதிமன்றம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் எனவும் திருத்துவதற்கான வழிவகுக்கும்.
இந்த நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களும் திருத்தப்படுவது நியாயமானதும் தர்க்கரீதியாக சரியானதும் ஆகும். மாநில அரசு, மக்கள் ஆகியோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் இது அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT