Published : 28 Mar 2017 10:03 AM
Last Updated : 28 Mar 2017 10:03 AM
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப் பதற்கான புதிய சட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ல் கொண்டு வந்தது. இச்சட்டத்தை செல்லாது என்று அறிவித்து 2015-ல் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
அதேசமயம், நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடை முறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர உச்ச நீதிமன்றம் சம்மதித்தது. அதற் கான முயற்சியாக நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகள்(எம்ஓபி) ஒன்றை வகுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் கை ஓங்கி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பிலும் பிடிவாதமாக இருப்ப தால், இந்த முயற்சி கடந்த 15 மாதங்களாக இழுபறியாக இருந்து வருகிறது.
கொலீஜியம் குழு ஒருவரது பெயரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தால், அதை மத்திய அரசு நினைத்தால் நிரா கரிக்கலாம் என்ற விதிமுறை மத்திய அரசால் வகுக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம் தரப் பில், தேசநலன் கருதி ஒருவரது பெயரை நிராகரித்தால், அந்த காரணத்தை விரிவாக எழுத்து மூலம் மத்திய அரசு தெரிவித்தால், அதை உச்ச நீதிமன்றம் தனி அமைப்பு மூலம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளை விசா ரிக்கும். அதன்பின்னர் உச்ச நீதி மன்றம் எடுக்கும் முடிவே இறுதி யானதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், நிராகரிப்பதற்கான காரணத்தை எழுத்துமூலம் தெரிவிக்க முடியாது. விரும்பினால், உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலை மட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பகிர்ந்து கொள்ளலாம். கொலீஜியம் குழுவில் உள்ள 5 நீதிபதிகளுக் கும் அதைத் தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் மத்திய அரசுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே பலகட்ட விவாதங்கள் நடந்துள் ளன. கோப்புகள் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட் டுள்ள நிலையில், மத்திய அரசு தனது முடிவில் பிடிவாதமாக உள்ளதால், இந்த விதிமுறையை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் தற்போது முடி வெடுத்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT