Published : 03 Feb 2014 07:50 AM
Last Updated : 03 Feb 2014 07:50 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு: அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவீத மாகிறது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப படுகிறது.

இந்த உயர்வால் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஒய்வூதிய தாரர்கள் பலனடைவார்கள். இரு இலக்க அளவில் அக விலைப்படி உயர்த்தப்படுவது தொடர்ச்சியாக இது 2வது தடவையாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 10 சதவீதம் உயர்த்தி 90 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தது. 2013 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது.

இப்போதைய அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் உயர்வு விகிதம் 10 சதவீத அளவை விட குறைவாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்ரவரி 28ல் டிசம்பருக்குரிய தொழில்துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் வெளியானதும் அதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப் படும் எனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

ஜனவரி 13ம் தேதி அரசு வெளியிட்ட தற்காலிக விவரப்படி தொழிலாளர்களுக்கான டிசம்பர் மாத சில்லறை பணவீக்க விகிதம் 9.13 சதவீதமாகும். தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண்ணின் கடந்த 12 மாத விவர அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை அரசு நிர்ணயிப்பது நடைமுறை.

எனவே, 2013 ஜனவரி 1- டிசம்பர் 31 இடையேயான தொழிலாளர் சில்லறை பணவீக்க விகித விவரத்தின்படி அகவிலைப்படி உயர்வு முடிவு செய்யப்படும்.

இப்போதைய நிலையில் அக விலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும். அதுபற்றி மார்ச்சில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என்.குட்டி தெரிவித்தார்.

அகவிலைப்படியை 100 சதவீதமாக உயர்த்துவதுடன் அடிப் படை ஊதியத்துடன் அகவிலைப் படியை இணைப்பது பற்றியும், ஊதிய உயர்வையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

50 சதவீத அளவை தாண்டி னாலே அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப் படியை இணைக்க வேண்டும்.

வேலைநிறுத்தம்: ஊதிய உயர்வு கோரி மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் அகவிலைப்படி உயர்வால் பெரிய நன்மை கிடைத்துவிடப் போவதில்லை என்றார் குட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x