Published : 14 Feb 2015 11:26 AM
Last Updated : 14 Feb 2015 11:26 AM
திரைப்படங்களில் தடை செய்யப்பட வேண்டிய வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலால் தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தின் புதிய தலைவர் பஹ்லாஜ் நிஹாலனி, மாநில தணிக்கை வாரிய அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சில வார்த்தைகள், சொற்றொடர்களை குறிபிட்டுள்ளார். அத்தகைய வார்த்தைகள் காட்சிகளில் இடம்பெற்றால் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக் காட்சிகளை வெட்ட வேண்டிய தணிக்கை வாரியமே அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.
முதலில், அமைச்சக அதிகாரிகள் அழுத்தம், ஊழல் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து லீலா சாம்சன் உட்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சர்ச்சையை கிளப்பினர்.
அதன் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த பிரச்சினைகள் அடங்கி வாரியம் செயல்படத் தொடங்கியுள்ளது. அதிலும் இப்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தணிக்கை வாரியத்தின் புதிய தலைவர் பஹ்லாஜ் நிஹாலனி, மாநில தணிக்கை வாரிய அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சில வார்த்தைகள், சொற்றொடர்களை குறிபிட்டுள்ளார். அத்தகைய வார்த்தைகள் காட்சிகளில் இடம்பெற்றால் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆங்கில, இந்தி வார்த்தைகள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஏற்கெனவே, பஹ்லாஜ் நிஹாலனியின் 'தடை பட்டியல்' சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளாது.
இந்நிலையில், வாரியத்தின் உறுப்பினர் அசோக் பண்டிட்டும் 'தடை பட்டியலுக்கு' எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆபாசம் என்ற பெயரில் சில ஆங்கில, இந்தி வார்த்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலால் ஒரு திரைப்பட படைப்பாளியின் சுதந்திரம் தடை படும் என அசோக் பண்டிட் விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டரில், "ஒரு படைப்பாளியாக, தணிக்கை வாரிய உறுப்பினராக நான் இந்தப் பட்டியலை ஆதரிக்கவில்லை. தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளவை குறித்து வாரியத்தின் தலைவர் என்னிடம் ஆலோசிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT