Published : 13 Oct 2014 02:22 PM
Last Updated : 13 Oct 2014 02:22 PM
எல்லையில் நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் சனிக்கிழமை இரவு மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் சற்று பதற்றம் தணிந்த இடங்களில் மீண்டும் தாக்குதல் அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில், எல்லையில் தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் அனில் கோசுவாமி, உளவுத்துறை அதிகாரி ஆசிப் இபராகிம், எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரி டி.கே பதக் உடன் இருந்தனர்.
அப்போது, எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத்திடம் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் விவரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT