Published : 20 Oct 2014 09:30 AM
Last Updated : 20 Oct 2014 09:30 AM
மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் அக்கட்சித் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். அவர்கள், பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என கோஷமிட்டனர்.
இத்தொண்டர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ‘பிரியங்காவை கொண்டு வா, காங்கிரஸை காப்பாற்று’ என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
பிரியங்காவை தீவிர அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அவரது அண்ணனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT