Last Updated : 03 Jun, 2017 03:53 PM

 

Published : 03 Jun 2017 03:53 PM
Last Updated : 03 Jun 2017 03:53 PM

சட்டவிரோத பணியிட மாற்றங்கள், பணி நியமனங்கள், லஞ்சப்புகார்: ராணுவ அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

சட்டவிரோத பணியிட மாற்றங்கள் மற்றும் சட்டவிரோத நியமனங்கள் விவகாரம் தொடர்பாக சில ராணுவ அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரக்ளில் லெப்டினண்ட் கலோனல் ரங்கநாதன் சுவ்ரமனி மோனி, ராணுவ அதிகாரி புருஷோத்தம், தொழிலதிபர் கவுரவ் கோலி மற்றும் முகம் தெரியாத சில நபர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் மீது இபிகோ பிரிவின் கீழ் குற்றச்சதி, லஞ்சம் கேட்டது, வாங்கியது, அரசு ஊழியர் மேல் அதிகாரம் செலுத்தியது, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.

ரங்கநாதன் என்பவர் கவுரவ் கோலி, மற்றும் புருஷோத்தம் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு பிரிவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உள்ளிட்டவைகளைத் தீர்மானிக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்று காரியத்தை முடித்துக் கொடுத்தது தெரியவந்தது.

வேறுபட்ட களத்தில் நியமிக்கப்பட்ட பிற ராணுவ அதிகாரிகள் அல்லது உடனடியாக பணியிட மாற்றத்தை எதிர்நோக்கும் அதிகாரிகள் ஆகியோர் தங்களுக்கு தோதான இடம் வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் புருஷோத்தம் என்ற ராணுவ அதிகாரி இவர்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி ராணுவத் தலைமைச் செயலகத்தில் உள்ள பணிநியமனப் பிரிவில் பலரிடமும் செல்வாக்கு மிகுந்த கவுரவ் கோலியிடம் அளிக்க, பெரிய தொகை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு இவர்கள் கூட்டணியாகச் செயல்பட்டு பணியிட மாற்றம், பதவி நிலை நியமனம் ஆகியவற்றில் காரியம் சாதித்துள்ளனர்.

இந்நிலையில் இதில் பலரும் சம்பந்தப்பட விவகாரம் சிபிஐ கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x