Published : 01 Jan 2014 06:41 PM
Last Updated : 01 Jan 2014 06:41 PM

லோக்பால் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் இதழில் வெளிடப்பட்டு, லோக்பால் சட்ட அந்தஸ்து பெறுகிறது.

முன்னதாக, மக்களவைத் தலைவர் மீரா குமார் கையெழுத்திட்ட லோக்பால் மசோதாவின் நகல், சட்டத்துறை அமைச்சகத்திற்கு நேற்று மாலை அனுப்பிவைக்கப்பட்டது. அதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக, ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி குடியரத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கையெழுத்திட்டார்.

இந்தத் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் டிசம்பர் 17-ம் தேதியும், மக்களவையில் 18-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டன.

லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் தலையாய அம்சங்களில் சில வருமாறு:

* மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு

* தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.

* லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.

* பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.

* லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.

* விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.

* ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படு வர்.

* நேர்மை, நாணயம் மிக்க ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு

* லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.

* சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு

* லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.

* ஊழல் வழியில் சேர்த்த சொத்துக் களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறை கள் உள்ளடங்கும்.

* ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.

லோக் ஆயுக்தா

* லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x