Published : 02 Sep 2016 01:53 PM
Last Updated : 02 Sep 2016 01:53 PM
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட 8.5% குறைவாக மழை பெய்துள்ளது. மாறாக சாதாரண மழையை விடவும் கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இதனால் வேளாண்மைக்குத் தேவையான நீரில் குறைவோ, நதிநீர் தேக்கங்கள், கால்வாய்களில் தேங்கும் நீரின் அளவோ மாறப்போவதில்லை என்றாலும், உலக அளவில் ஏற்படும் வானிலை மாற்றங்களின் இந்திய பருவ மழை தாக்கங்களை கணிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய மாதிரிகள் போதாமையாக உள்ளன என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலையில் தி இந்து (ஆங்கிலம்), அடுத்த ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பு மாதிரிகளை சூப்பர் கணினி வழிமுறையில் இயங்கியல் ரீதியான வானிலை ஆய்வு மாதிரியை நோக்கிச் செல்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் நாட்டில் எப்போதும் இயல்பாக 26 செமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 4% கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் சகஜமான மழையை விட 8% குறைவாகவே பெய்துள்ளது.
உலக பருவ நிலை முன் கணிப்புகள் அனைத்தும் எல் நினோவுக்கு எதிரான லா நினா விளைவு ஏற்படும் என்று கணித்துள்ளதால் இந்தியாவுக்கு அதிக மழை உண்டு என்றே கூறப்பட்டது. ஆனால் இதுவரை லா நினா விளைவு பலவீனமாகவே உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் டி.எஸ்.பய் கூறும்போது, “தெற்கில் மழையின் அளவு குறையும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை, மேலும் லா நினா விளைவை ஊக்குவிக்கும் பிற காரணிகளும் சரிவர கூடி வராததால் மழை குறைந்துள்ளது” என்றார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியா அது பெற வேண்டிய மழையின் அளவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
2014 மற்றும் 2015 தொடர் வறட்சி வலுவான எல் நினோவினால் ஏற்பட்டது. ஆனால் 2016-ல் எல் நினோ விளைவு மறைந்து லா நினா ஏற்படுவதால் மழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
இந்நிலையில் கணித்தை விட ஆகஸ்டில் குறைவாகவே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT