Published : 19 Sep 2016 05:08 PM
Last Updated : 19 Sep 2016 05:08 PM
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் நேற்று பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பிஹாரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 பேர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குகிறது அம்மாநில அரசு.
3 ராணுவ வீரர்களின் கிராமங்களிலும் சோகமான சூழ்நிலை நிலவுகிறது. மூவரின் பெற்றோரும் கடுமையாக மனமுடைந்து போயுள்ளனர். கைமூ கிராமத்தைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் என்பவர் கூறும்போது, “ராகேஷ் சிங் மரணத்தினால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆனால் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரை நினைத்து நாங்கள் பெருமையடைகிறோம்” என்றார்.
கைமூர் கிராமத்தின் ராகேஷ் சிங், கயாவைச் சேர்ந்த நாயக் வித்யார்த்தி, போஜ்பூரைச் சேர்ந்த அசோக் குமார் ஆகிய மூவரின் உடல்களும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று பிஹார் மாநிலம் அறிவித்துள்ளது.
1941-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் உருவானதே பிஹார் ரெஜிமண்ட். 1999 கார்கில் போரின் போது இதன் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவர்களின் வீரத்திற்கு அங்கீகாரமாக இந்தப் படையைச் சேர்ந்த பல வீரர்களுக்கு வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, அசோக் சக்ரா ஆகிய விருதுகள் அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT