Published : 02 Oct 2014 12:04 PM
Last Updated : 02 Oct 2014 12:04 PM
காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிவுக்குப் பின், மறைமுகத் திட்டம் ஏதேனும் இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் 15 ஆண்டுகால கூட்டணி சமீபத்தில் முறிந்தது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் பிருத்வி ராஜ் சவான் ராஜினாமா செய்தார். மாநில ஆளுநர் தேர்தல் முடியும் வரை தன்னை முதல்வராக இருக்கப் பணித்த பிறகும், மத்திய அரசு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை நடத்துகிறது என்று பிருத்விராஜ் சவான் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி முறிவுக்குப் பின், ஏதேனும் மறைமுகத் திட்டம் இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா செய்தியாளர் களிடம் கூறும்போது, "தற்சமயம் காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க., தோல்வியைச் சந்திக்கும் என்று நம்புகிறோம். தேர்தலுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி ஏதேனும் இருக்குமா என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது. ஆனால் தேசிய வாத காங்கிரஸ் தான் எங்களை விட்டுவிட்டது. இதற்குப் பின் ஏதேனும் மறைமுகத் திட்டம் இருக் கலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT