Published : 07 Feb 2014 08:24 PM
Last Updated : 07 Feb 2014 08:24 PM
பெண் டாக்டர் ஒருவரால் பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் சுகாதார அமைச்சர் ஷபீர் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறும்போது, சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஷபீர் கானிடம் இருந்து தனக்கு ராஜினாமா கடிதம் வந்தது என்றும், அதை ஏற்குமாறு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக பெண் டாக்டர் ஒருவர் ஷபீர் கான் மீது புகார் கூறியிருந்தார்.
ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி அமைச்சர் தன்னை வரவழைத்தார் என்றும், தவறான நோக்கத்தில் அமைச்சர் தன்னை நெருங்கியபோது, தான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்து அறையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
அந்தப் புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷபீர் கான் மீது போலீஸார் வியாழக்கிழமை பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT