Published : 13 Sep 2016 01:36 PM
Last Updated : 13 Sep 2016 01:36 PM
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினையால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித் துள்ளார். வன்முறை ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது. வன்முறையால் பொதுச் சொத்துகளுக்குதான் சேதம் ஏற்படும். ஏழைகள் கடுமையாக பாதிப்படைவர். ஜனநாயக நாட்டில் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மாறாக சட்டத்தை உடைத்தெறியும் வகையில் பிரச்சினைக்கான தீர்வை மாற்று வழியில் தேடக்கூடாது.
நாடு எப்போதெல்லாம் இக்கட்டான சூழலை சந்திக் கிறதோ, அப்போதெல்லாம் பிற மாநில மக்களை போலவே கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக நடந்து கொண் டுள்ளனர். எனவே தற்போதும் அதுபோலவே இரு மாநில மக்களும் உணர்ந்து செயல்பட்டு அமைதி காக்க வேண்டும். சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய எல்லைகளை கடந்த நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைத்துக்கும் மேலாக தேச கட்டுமானம் மற்றும் நலனுக்கு இருமாநில மக்களும் முக்கியத் துவம் அளிப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரு மாநில அரசுகளும் வன்முறையை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட நாள் முதலாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்தவொரு சந்தர்ப் பத்திலும் வன்முறையை நியாயப் படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகளால் பொதுச் சொத் துகள் நாசமாவதுடன் சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக் கப்படும்.
இருமாநிலங்களின் வாதத்தை ஏற்றபிறகே காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப் படி இருந்தும் பிரச்சினை ஏற்பட் டால் இரு மாநில தலைவர்களும் ஒன்றாக கலந்து பேசி தீர்வு காண முயல வேண்டும். வன்முறைக்கு பதிலடி மற்றொரு வன்முறையா காது. இரு மாநில அரசுகளும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் யவும், வன்முறையை தடுத்து நிறுத்தவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT