Published : 15 Mar 2014 10:10 AM
Last Updated : 15 Mar 2014 10:10 AM

மம்தாவை ஆதரிக்க முடியாது: அண்ணா ஹசாரே

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் அவர் கட்சியை ஆதரிக்க முடியாது என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மம்தா பானர்ஜி தன் 17 அம்சக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் அவர் பிரதமராவதற்குத் தகுதியானவர் என்று ஹசாரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மக்கள் மிகக் குறைந்த அளவே வந்திருந்தனர். இக் கூட்டத்தில் ஹசாரேவும் பங்கேற் பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஹசாரே பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் மம்தா மிகுந்த கோபத்துடன் காணப் பட்டார்.

இக்கூட்டத்தை ஒருங் கிணைத்தவர்கள் இருதரப் பினரிடையேயும் தவறான தகவல்களைத் தெரிவித்து விட்டனர் என ஹசாரே குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அண்ணா ஹசாரே செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இக்கூட்டம் மம்தாவுடையது என்று என்னிடமும், ஹசாரே வினுடையது என்று மம்தாவிடமும் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தவறான தகவலைத் தெரிவித் துள்ளனர்.

நான் வந்து பார்த்த போது கூட்ட அரங்கில் 2,500 பேரே இருந்தனர். மதியம் 1 மணிக்கு மேல் வெறும் 4,000 பேர் என்ற அளவில்தான் கூட்டம் இருந்தது. மிக ஏமாற்றமாக இருந்தது. ஆகவே நான் அக்கூட்டத்தைப் புறக்கணித்து விட்டேன்.

நான் மம்தாவை மதிக்கிறேன். நாட்டிலுள்ள அனைத்து முதல்வர்களிலும் அவரே மிகச் சிறந்தவர். அவரின் தியாகம், நடத்தை, அவரின் சித்தாங்களை நான் மதிக்கிறேன். அவரை நான் ஆதரிக்கிறேன், அவரின் கட்சியை அல்ல என்றார் அவர்.

மம்தா கோபம்

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், "அந்த மாநாடு அண்ணாவின் கவனத்துக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த மாநாடு திரிணமூல் கட்சியினுடையது அல்ல.

இந்திரா காந்தி 1977-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது வெறும் 5, 6 பேருடன் பேரணியும் பொதுக் கூட்டமும் நாங்கள் நடத்தியதை மறந்து விடக்கூடாது. வெறும் 2 பேர் இருந்தால் கூட எங்களால் கூட்டம் நடத்த முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x