Published : 10 Mar 2017 09:49 AM
Last Updated : 10 Mar 2017 09:49 AM
செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைத் சேர்ந்த 159 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, கடப்பா வனப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செம்மரம் வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அதிரடிப்படை போலீஸார் நேற்று அதிகாலை முதல் நேற்று முற் பகல் 11 மணி வரை சித்தூர் மாவட்டம் பாகராப்பேட்டை மற்றும் கடப்பா மாவட்டம் பொதட்டூர் வனப்பகுதி களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது போலீஸார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல், வெட்டிய செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளது. உடனடி யாக அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் மொத்தம் 159 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 280 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற் றின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.
மேலும் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திரு வண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, ஜமுனாமத்தூர் மற்றும் தரும புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலைப் பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக அதிரடிப்படை திருப் பதி எஸ்.ஐ. வாசு செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT