Published : 30 Aug 2016 01:18 PM
Last Updated : 30 Aug 2016 01:18 PM
பணியில் சேர்ந்து 2 நாட்களே ஆன எஸ்.ஐ தனது சர்வீஸ் துப்பாக்கியை இன்று காலை (செவ்வாய்க்கிழமை) சுத்தப்படுத்தும்போது, கைதவறி சுட்டதில் அவரது தலையில் 2 தோட்டக்கள் பாய்ந்தன. இதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், கேரமேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்தார் எஸ்.ஐ ஸ்ரீதர் (24).
இவர் அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்தாருடன் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று காலை தனது சர்வீஸ் துப்பாக்கியை சுத்தப்படுத்தும்போது, கைதவறி அது சுட்டதில் 2 தோட்டக்கள் எஸ்.ஐ ஸ்ரீதரின் தலையில் பாய்ந்தது.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். துப்பாக்கி சத்ததை கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர்.
பின்னர் கதறி அழுதபடி ஸ்ரீதரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார். இது குறித்து ஆதிலாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா? அல்லது தற்செயலா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT