Published : 30 Mar 2014 01:05 PM
Last Updated : 30 Mar 2014 01:05 PM
பிஹார் மாநிலத்தில் 4 பேரை கடத்திச் சென்ற மாவோ யிஸ்டுகள் அதில் ஒருவரை கொன்று விட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜித்தேந்திர ராணா கூறியதாவது:
ஜமுய் மாவட்டம் தாவாடன்ட் நகரைச் சேர்ந்த 4 பேரை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவர்களில் மூன்று பேரை விடுவித்த அவர்கள், அஜய் கோடா என்பவரை மட்டும் தங்கள் வசம் வைத்திருந்தனர். இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை அஜயின் சடலத்தை போலீஸார் மீட்டனர்" என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாரியா கொடாசி யைச் சேர்ந்த 11 பேர் மாவோ யிஸ்டுகளால் கொல்லப் பட்டனர். இதையடுத்து, பின்டு கோடா தலைமையி லான குழுவினர் மாவோயிஸ்டு களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வந்தனர். இப்போது கடத்தப்பட்ட 4 பேரும் இந்தக் குழுவைச் சேர்நதவர்களாக இருக்கலாம் என ராணா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT