Published : 01 Feb 2016 08:11 AM
Last Updated : 01 Feb 2016 08:11 AM

இடஒதுக்கீடு கோரி காப்பு சமுதாயத்தினர் போராட்டம்: ரயில், போலீஸ் நிலையம் எரிப்பு- ஆந்திராவில் திடீர் பதற்றம்

காப்பு சமுதாயத்தினரை பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டத் தின்போது வன்முறை வெடித்தது. அவ்வழியாகச் சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. அங்குள்ள போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

நாயுடு பிரிவில் ஒன்றான காப்பு சமுதாயத்தினரை பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியில் நேற்று ‘காப்பு கர்ஜனை’ எனும் பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பத்மநாபம் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக் கப்பட்டது. அப்போது ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல கி.மீ. தொலைவுக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதேநேரம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் துனி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜய வாடா-விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் ரத்னாஞ்சல் எக்ஸ் பிரஸ் ரயில் வந்து கொண்டிருந் தது. இந்த ரயிலை ஆர்ப்பாட்டக் காரர்கள் மறித்து நிறுத்தினர். பின்னர் ரயில் மீது கற்களை வீசினர். சிலர் ரயில் பெட்டிகளை தீ வைத்து கொளுத்தினர். ரயிலில் இருந்த பயணிகள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் 8 பெட்டிகள் முழுவதுமாக தீயில் கருகின.

இந்த சம்பவத்தால் அவ்வழி யாக வந்த ரயில்கள் விஜயவாடா, விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட் டன. விசாகா எக்ஸ்பிரஸ், கோதா வரி எக்ஸ்பிரஸ், பூரி-வோகோ எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-காக்கிநாடா பாசஞ்சர் ரயில்கள் விசாகப்பட்டினத்திலும் சென்னை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பலமஞ்சியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் மீது கல்வீச்சு

இதனிடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் செய்தியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ்காரர்களும் செய்தி யாளர்களும் பலத்த காயமடைந் தனர்.

ரயில் மறியல், சாலை மறியல் நடந்த இடங்களுக்கு போலீஸார் செல்ல முடியாதபடி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பு அரண் அமைத்தனர். இதனால் ஆங்காங்கே போலீஸார் சிறைவைக்கப்பட்டனர்.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்த கலவரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்துறை உயரதிகாரிகளுடன் விஜயவாடாவில் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாதாரண மக்கள் இதில் பாதிப்படையக் கூடாது எனவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து விசாகப் பட்டினம், ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய இடங்களில் இருந்து போலீஸ் படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கலவரம் நடந்த துனி பகுதி உட்பட பதற்றமான அனைத்து பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆந்திரா முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x