Published : 08 Oct 2013 11:52 AM
Last Updated : 08 Oct 2013 11:52 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு, தமது அனைத்து இலாகாக்கள், நிறுவனங்கள், அமைப்புகளில் 3 சதவீத வேலைவாய்ப்பை ஒதுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், தலைமையிலான அமர்வு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய இந்த உத்தரவை பிறப்பித்தது.
இட ஒதுக்கீடு வழங்கும்போது 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்கிற கொள்கையானது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டுக்கு பொருந்தாது என்றும் இந்த அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
எல்லா துறைகளிலும் எவ்வளவு வேலைவாய்ப்பு காலியாக உள்ளது என்கிற விவரத்தை சேகரித்து அதில் 3 சதவீத இடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமூகரீதியிலான பல்வேறு தடைகளால் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெற முடிவதில்லை. அவர்கள் வறுமையில் உழல்வதற் கும், அரவணைப்பும் கவனிப்பும் இல்லாமல் புறக்கணிக்கப்படுவதற் கும் இது காரணமாகி விடுகிறது என்பது நெஞ்சைப் பிளக்க வைக்கும் உண்மை.
மாற்றுத் திறனாளிகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான சில உத்தரவுகளை பிறப்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT