Published : 01 Jun 2016 09:11 AM
Last Updated : 01 Jun 2016 09:11 AM
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் போன்று ஆந்திர மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ‘அண்ணா கேன்டீன்’கள் தொடங்கப்பட உள்ளது. என எம்.பி. கேசினேனி நாநி தெரி வித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் ஏழைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகம் போன்று ஆந்திரா விலும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் விஜயவாடாவில் உள்ள ஆட்டோ நகர் பகுதியில் முதல் கேன்டீன் தொடங்கப்படும். இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படிப்படி யாக ஆந்திர மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த கேன்டீனுக்காக மட்டும் ரூ. 3.5 கோடி செலவிட திட்டமிட்டுள் ளது. தனியார் இடத்தில் இந்த கேன்டீன் கட்டப்படும். இதற்காக 6 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.
இந்த கேன் டீன் பணியையும், மேற்பார்வையும் பெங்களூரு இஸ்கான் அறக்கட்டளை மேற் கொள்ளும். இவ்வாறு எம்.பி. கேசினேனி நாநி தெரிவித்தார்.ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி யின் நிறுவனருமான என்டிஆரை அவரது ஆதரவாளர்கள் அண்ணா என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
அவரது நினைவாக அண்ணா கேன்டீன் திட்டம் செயல்படுத்தப் படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT