Published : 12 Sep 2018 10:18 AM
Last Updated : 12 Sep 2018 10:18 AM
காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இன்று அதிகாலை (புதன்கிழமை) அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் 5.43க்கு ஹரியானாவின் ஜாஜார் மாவட்டத்தில் மீண்டும் பூமி அதிர்ந்தது. இதன் அளவு 3.1 ரிக்டர்.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது கட்டிட சேதாரங்கள் குறித்த விவரம் எதுவும் இன்னும் வரவில்லை.
இதே இடத்தில் செப்டம்பர் 9 அன்று 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு இருந்தது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 10 அன்றும் நில அதிர்வு ஏற்பட்டது. 10 மீட்டர் ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவில் இதன் பாதிப்பு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT