Published : 25 Sep 2018 07:42 AM
Last Updated : 25 Sep 2018 07:42 AM

எம்எல்ஏவை கொன்ற மாவோயிஸ்ட்களை பிடிக்க ஆந்திரா - ஒடிசா எல்லையில் தீவிர தேடுதல் வேட்டை : கொலையில் தொடர்புள்ளவர்களின் படங்களை போலீஸ் வெளியிட்டது

ஆந்திராவில் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ-வை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட் தீவிரவாதி களை பிடிக்க ஆந்திரா - ஒடிசா எல்லையில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட் டினம் மாவட்டத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காரில் செல்லும்போது 60-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வழி மறித்தனர். லிப்பிடிப்புட்டா பகுதி யில் பாக்சைட் சுரங்கம் அமைக்க ஆதரவு அளித்தது ஏன் என்று அப் போது எம்எல்ஏ சர்வேஸ்வர ராவிடம் வாக்குவாதம் செய்ததாகவும் பின் னர் இருவரையும் சுட்டுக்கொன்ற தாகவும் போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண் மாவோயிஸ்ட் கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அரக்கு தொகுதியில் எம்எல்ஏ-க் களின் ஆதரவாளர்கள் வன்முறை யில் இறங்கினர். இதில் 2 காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப் பட்டது. இதனால் விசாகப்பட்டி னம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதி களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோத னைக்கு பிறகு நேற்று காலை உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவின் இறுதிச் சடங்குகள் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேரு பகுதியில் நடை பெற்றது. இதுபோல் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமாவின் இறுதிச்சடங்கு அரக்கு தொகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான பத்தி வலசா என்ற இடத்தில் நடந்தது. ஆந்திர துணை முதல்வர் சின்ன ராஜப்பா மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து இவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாடேருவில் நேற்று பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வராவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளாமனோர் பங்கேற்றனர். பின்னர் இருவருக் கும் அரசு மரியாதையுடன் தகன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆந்திரா - ஒடிசா எல்லையில் மாவோயிஸ்ட்களை தேடும் பணிக் காக மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் இரு மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லைப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர். ஹெலிகாப்டர் மூலமாகவும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்டறிய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாக்கூர் இப்பணிகளை கண் காணித்து வருகிறார். இங்குள்ள தொலைதூர கிராமங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட் டுள்ளனர். எம்எல்ஏ கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் மாவோயிஸ்ட்கள் 3 பேரின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஜல முறி சீனு, காமேஸ்வரி மற்றும் அருணா ஆகியோர் என அடை யாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தில், விசாகப்பட்டினம் துணை போலீஸ் ஆணையர் பகீரப்பா, எஸ்பி ராகுல் தேவ் ஷர்மா ஆகியோர் தலைமை யிலான குழு விசாரணை நடத்தியது. எல்எல்ஏ கொல்லப்பட்டதை தொடர்ந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதாக தும்பிரிகுடா காவல் நிலைய எஸ்ஐ அமன் ராவ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று இப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பேருந்துகளும் இயங்கவில்லை. மேலும் சுற்றுலா தலமான அரக்கு பகுதியும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x