Published : 17 Sep 2018 09:41 AM
Last Updated : 17 Sep 2018 09:41 AM
ஹைதராபாத்திலிருந்து வனபர்த்தி எனும் பகுதிக்கு நேற்று காலை தெலங்கானா அரசு பஸ் சென்றது. நேற்று தெலங்கானாவில் கிராம வருவாய் அதிகாரி பணிக்கான தேர்வு நடந்ததால், இந்த பஸ்ஸில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் இருந்தது. பஸ்ஸின் மேற்கூரை மீதும் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். மொத்தம் 100 பயணிகள் இந்த பஸ்ஸில் சென்றனர்.
நாகர் கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், ஒட்டே எனும் இடத்தில் பஸ் வந்தபோது, அந்த பஸ்ஸின் முன் டயர்கள் திடீரென பஞ்சர் ஆகி வெடித்தது. இதனால் பஸ் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ்ஸின் மீது உள்ள பயணிகள், கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மேலும், பஸ்ஸுக்குள் இருந்த பயணிகளும் காயமடைந்தனர். சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் நாகர் கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதுகுறித்து நாகர் கர்னூல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி முன் தெலங்கானாவில் நடந்த கோர பஸ் விபத்தை மறப்பதற்கு முன்பாக மற்றொரு பஸ் விபத்து நடந்துள்ளதால் தெலங்கானா மக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யவே மிகவும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT