Last Updated : 04 Sep, 2018 02:13 PM

 

Published : 04 Sep 2018 02:13 PM
Last Updated : 04 Sep 2018 02:13 PM

ஆட்டோவைவிட குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்: மத்திய அமைச்சர் சாதுர்யப் பேச்சு

ஆட்டோவைவிட, விமான பயணக் கட்டணம், தற்போது குறைவாக இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் விமான நிலையத்தில், புதிய உள்நாட்டு விமான முனையக் கட்டிடத்தை அவர் இன்று திறந்துவைத்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது

‘‘ஆட்டோவில் செல்வதை விட விமானக் கட்டணம் தற்போது குறைவாக உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம்? இரண்டு பேர் ஆட்டோவில் செல்வதற்காக ரூ.10  தருகிறீர்கள். அதாவது நாம் அவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் விமானத்தால் செல்லும்போது அதே ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் ஆட்டோவைவிட, மலிவான விமான பயணத்தை மோடி ஆட்சி வழங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2018 -ம் ஆண்டில் விமானம் மூலம் பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2013 ம் ஆண்டு வரை, விமானத்தில் பயணம் செய்த சுமார் ஆறு கோடி பேர்.

ஆனால் இன்று அந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள், விமானப் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். முன்பு நம் நாட்டில் 75 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று இந்தியா முழுவதும் ் 100 விமான நிலையங்கள் உள்ளன’’ என மத்திய அமைச்சர் ஜெயன்ந்த் சின்ஹா பேசினார்.

விமானப் பயணக் கட்டணத்தோடு ஆட்டோ கட்டணத்தை மத்திய அமைச்சர் ஒப்பிட்டு பேசியபோது கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் சற்றே நெளிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x