Last Updated : 25 Sep, 2018 11:07 AM

 

Published : 25 Sep 2018 11:07 AM
Last Updated : 25 Sep 2018 11:07 AM

அசாமில் மிதமான நிலநடுக்கம்

அசாமில் இன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியது.

இதுகுறித்து ஏஎன்ஏ வெளியிட்ட செய்தியில் "அசாமின் பர்பேடா மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9. 17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4. 7 ஆக பதிவாகியது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் கவுகாத்தி மற்றும் அசாமின் பிற பகுதிகளிலும், பிற வடகிழக்கு  மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும்  உணரரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x