Last Updated : 27 Sep, 2018 03:08 PM

 

Published : 27 Sep 2018 03:08 PM
Last Updated : 27 Sep 2018 03:08 PM

சாலையில் மாணவர்கள் உறங்கியதால் பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாநில நிர்வாகம் நடவடிக்கை

சுற்றுலா சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் சாலையிலேயே தூங்கவைத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.

பிஹார் மாநிலம், கிழக்கு சாம்பரானிலிருந்து பள்ளிக்கூட மாணவர்கள் வெளியூருக்கு சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர். இவர்கள் சென்ற பேருந்து எதிர்பாராதவிதமாக திடீரென வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டது. பாட்னா மிருகக் காட்சி சாலை அருகே செல்லும்போது பேருந்து என்ஜின் பழுதாகி நின்றபோது முன்னிரவைக் கடந்துவிட்டது.

இந்நிலையில் எங்கு செல்வது யாரை உதவிகேட்பது என்று தெரியாத நிலையில் செவ்வாய் அன்று இரவுமுழுவதும் இம் மாணவர்கள் அனைவரும் பிரதான சாலையிலேயே படுத்துறங்கி விட்டனர்.

இம் மிருகக் காட்சி சாலை, பிஹார் முதல்வர் வீட்டுக்கு அருகே இருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், சாலையில் மாணவர்கள் படுத்துறங்கிய சம்பவம் பற்றிய தகவல் மறுநாள் தலைமை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மாணவர்களின் இச்சுற்றுலாப் பயணம் பிஹாரில் செயல் படுத்தப்பட்டுவரும் 'முக்கிய மந்திரி பிஹார் தர்ஷண் யோஜனா திட்டத்'தின் ஒரு பகுதி என்பதால் மாணவர்களின் இச்சம்பவத்தில் ஆசிரியர் அலட்சியமாக செயல்பட்டதாக அரசு அதிருப்தி அடைந்தது.

அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களை சாலையில் உறங்க வைத்ததாகக் கூறி, மாநில அரசு பள்ளி ஆசிரியர் ஆனந்த் சிங் இடைநீக்கம் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x