Published : 09 Sep 2018 09:03 AM
Last Updated : 09 Sep 2018 09:03 AM
தெலங்கானாவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட சூட்டோடு சூடாக தேர்தல் பிரச்சாரத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தொடங்கியுள்ளது.
தெலங்கானாவில் 9 மாதங்க ளுக்கு முன்பே முதல்வர் சந்திர சேகர ராவ் ஆட்சியை கலைத்து விட்டார்.ராஜஸ்தான், ம.பி. உள் ளிட்ட 4 மாநில தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட உடனே 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளி யிட்டார். இதையடுத்து டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்கள், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தங்கள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறப் பான வரவேற்பு காணப்படுகிறது.
119 இடங்களை கொண்ட சட்ட பேரவையில் சுமார் 100 தொகுதி களை கைப்பற்றுவோம் என அக் கட்சியினர் கூறுகின்றனர்.
ஹைதராபாத்தில் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ளதால் டிஆர்எஸ் இம்முறை எம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் சமீப காலமாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ், பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் அக்கட்சியுடனும் கூட் டணிக்கு வாய்ப்பிருப்பதாக கூறப் படுகிறது.
இதனிடையே முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் இம்முறை ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. “தெலங்கானா மாநிலம் வழங்கியது நாங்கள்தான். ஆத லால் மக்கள் இம்முறை எங்களுக் குத்தான் வாக்களிப்பார்கள்” என அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 20 முதல் 22 சதவீத வாக்குகள் உள்ளதால் அக்கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிர மாக களமிறங்க உள்ளது. இது தொடர்பாக இக்கட்சியின் தலை வரும் ஆந்திர முதல்வருமான சந்திர பாபு நாயுடு நேற்று ஹைதரா பாத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் மக் களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி, கூட்டணிக்கான வாய்ப்பு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக் கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள், பேரா சிரியர் கோதண்டராம் ஆகியோ ருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகள் சிலர் ஆலோசனை வழங்கினர். இது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT